
சிவா மனசில சக்தி
ஆணுக்கும்,பெண்ணிற்கும் இடையே நடக்கும் ஈகோவை வைத்து அன்பேவா, தில்லானா மோகனாம்பாள், குஷி, திருடா திருடி என்று பல படஙகள் வந்திருந்தாலும், இந்த கருவை வைத்து இண்ட்ரஸ்டாக திரைக்கதை அமைத்தால் நிச்சயமாய் வெற்றியடையும். அதே நேரம் திரைக்கதையில் கொஞ்சம் சொதப்பினாலும் ஆங்காங்கே இழுவையாய் போகும் வாய்ப்பும் உண்டு. அந்த வகையில் சிவா மனசுல சக்தி இரண்டாம் வகை.
ரெயிலில் நடக்கும் முதல் சந்திப்பிலேயே சிவாவுக்கு காதல் வந்துவிடுகிறது. பரஸ்பரம் இருவரும் மாற்றி மாற்றி தங்களை பற்றி பொய் சொல்ல, அது தெரியும் போது, தாஙகள் ஏமாற்றபட்டதால் காண்டாகி போய் ஒருவரை ஒருவர் மாட்டிவிட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். அந்த இருவரின் ஈகோவும் உடைந்து தங்கள் காதலை சொன்னார்களா இல்லையா? அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா..? என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள்.
ஜீவாவுக்கு ஏற்ற வேடம்.. மிக இயல்பாய் நடித்திருக்கிறார். படம் நெடுகிலும் அவரும், சந்தானமும், சில சமயம் கிச்சு,கிச்சும், சில சமயம் நம்மை மறந்து சிரிக்க வைக்கிறார்கள். அதிலும் ஒவ்வொரு முறை சந்தானம் புது செல் வாங்கும் போதும், அதை ஜீவா உடைப்பதும் சூப்பர்.. அதில் உச்சம் சந்தானம் புதுசு, புதுசாய் செல் வாங்கி வந்து காட்டினால் அதை வாங்கி சக்தியிடம் பேசி விட்டு கோபத்தில் உடைக்கிறான் என்று லேண்ட்லைன் போன் வைத்திருந்தால் அதையும் மப்பாகி அதன் மேல் விழுந்து உடைக்கும் இடம் சூப்பர்.
கதாநாயகி அனுயா.. வேறு நல்ல முகமே கிடைக்கவில்லையா.. எப்ப பார்த்தாலும் விளக்கெணணைய் குடித்தார் போலிருக்கிறது அவரது முகம். பல இடங்களில் ரியாக்ஷன்கள் எல்லாமே ஒரே மாதிரியாய் இருக்கிறது. இவரால் பல இடங்களில் படம் இழுவையாகிறது.
இம்மாதிரியான கதைகளுக்கு ஒரு அழகான, இளமையான, பார்க்கும் நமக்கே லவ் செய்யலாமாங்கிற ஒரு தோற்றம் வேண்டும் அது மிஸ்ஸிங்.. பாவம் அவர் ஒவ்வொரு வார்த்தையையும், ப்ராம்ட் வாங்கி பேசுவது நன்றாய் தெரிகிறது.
ஜீவாவின் அம்மாவாய் ஊர்வசி.. இவரை காமெடியாய் யூஸ் செய்ய வேண்டும் என்று பல இடங்களில் அவரை ஒரு லூசு போல காட்டியிருப்பது கொஞ்சம் ஓவர். அதே போல் அனுயாவின் அப்பா ஞானசம்பந்தம் கேரக்டரும், அவர் சீரியஸ் அப்பாவா, அல்லது சும்மா வந்திட்டு போற அப்பாவான்னு தெரியல.. அதிலும் க்ளைமாக்ஸில் ஜீவா அவருடய பெண்ணை “மேட்டர்” பண்ணிவிட்டதாய் அவரிடமே சொல்ல.. அதை ஊர்வசியும், ஞானசம்பந்தமும், அதை பற்றி புரியாமல் பேச, அனுயா எந்தவிதமான உணர்வுகளும் இல்லாமல், ஜீவாவை பற்றி பேசுவது காமெடி என்கிற அபத்த கூத்து.
அதே போல் ஜீவா, அனுயா வேலை செய்யும் ஆபீசில் போய் குடித்துவிட்டு நட்ட நடு ஆபீஸில் சட்டையில்லாமல் போய் பிரச்சனை பண்ண, அங்கே வரும் போலீஸ் அவனிடம் என்ன காதல் பிரச்சனையா..? என்று கேட்டுவிட்டு செலவுக்கு காசு கொடுத்துவிட்டு போவது இன்னொரு காமெடி என்கிற அபத்த கூத்து.
சத்யன், அனுயாவின் அண்ணன், இவரும் தன் பங்குக்கு ஆங்காங்கே வந்து நம்மை சிரிக்க வைக்க முயற்சி பண்ணுகிறார். அதில் வெற்றியும் பெறுகிறார். அனுயாவும், ஜீவாவும் சந்திக்க வைப்பதற்காகவே ஏற்பட்ட கேரக்டர்.
அனுயா, ஜீவாவிடம் தன் காதலை டாஸ்மாக் பாரில் வ்ந்து சொல்வது புதிது. ஆனால் அந்த காட்சிக்கு சுற்றுபுறத்தில் உள்ள மற்ற குடிகாரர்கள் எந்த விதமான ரியாக்ஷனும் கொடுக்காமல் இருப்பது ஆச்சர்யம். மற்ற குடிகாரர்களை வைத்து இன்னும் அருமையாய் செய்திருக்கலாம் இயக்குனர். அதுமட்டுமில்லாமல் கதை இங்கயே முடிந்துவிட்டது. அதற்கு அப்புறம், கோயில், கல்யாணம், கல்யாணத்துக்கு முன் செக்ஸ், மறுபடியும், சண்டை, க்ளைமாக்ஸ் என்று இழுத்திருக்கிறார்கள்.
சக்தி சரவணனின் ஓளிப்பதிவு ஒகே. ஒரு சில காட்சிகளில் பேக்ரவுண்ட் ப்ளீச் அடிக்கிறது. முக்கியமாய் ஜீவா, அனுயாவை தேடி தாய் ஏர்வேஸுக்கு வந்து பேசும் காட்சி, பல காட்சிகள் ஹேண்ட் ஹெல்டில் எடுக்கபட்டிருக்கிறது. அதனால் நிறைய காட்சிகள் நீளமாய், கொஞ்சம் ட்ராமா போல் இருக்கிறது. ஒரே சமயத்தில் ப்ரேமில் நான்கு பேர் தொடர்ந்து நின்றபடி, ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டபடி மாற்றி, மாற்றி பேசுவது, ஓவர்லாப்பில் டயலாக் போய்விடுகிறது.
யுவனின் இசையில்.. ஒரு கல், ஒரு கண்ணாடி சூப்பர்.. மற்ற பாடல்க்ளை பற்றி பெரிசாய் சொல்ல ஏதுமில்லை. டைட்டிலில் வரும் ஆரம்ப பிண்ண்னி இசை துள்ளல்.. ஏனென்றால் அது அவங்க அப்பா மணிரத்னம் படத்துக்கு அடிச்ச பிரபல ரீரிக்காட்டிங்.. பின்னால் அதே டியூனில் அவர் பாட்டு வேறு போட்டிருக்கிறார். பிண்ணனி இசையும் ஒகே.
இயக்குனர் ராஜேஷ், மிகவும் நம்பியிருப்பது டயலாக்குளை என்று தெரிகிறது, பல இடங்களில், இயல்பான நகைச்சுவை நம்மை கட்டி போடுகிறது. சில இடங்களில் ரொம்ப பேசறாங்கப்பா..ன்னு தோணுது. முதல் பாதி ரொம்பவே நீளம். இதோ..இதோ என்று இடைவேளையை எதிர்பார்க்க வைத்துவிட்டார்கள்.
கொஞ்சம் கேரக்டரைசேஷனிலும், திரைக்கதையிலும் கவனம் செலுத்தியிருந்தால்..??? நிறைய விஷயஙக்ள் பெரிசாய் ஒட்டவில்லை, முக்கியமாய் அந்த பர்த்டே சீன், எவ்வளவோ அருமையாய் வந்திருக்க வேண்டிய சீன் அதை மிஸ் பண்ணிவிட்டீர்கள், அதே போல் அந்த டாஸ்மாகில் காதலை சொல்லும் சீன் அதிலும் நிறைய ஸ்கோர் பண்ண வாய்பிருந்தும் ..?? ஒரு வேளை படம் கலகலவென போனால் போதும் என்று இருந்துவிட்டாரோ..?
அதே போல் பஸ்ஸில் ஜீவா பேசியதை அனுயா காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு கேட்காமல் போய்விட்டார் என்பதை அவர் ஹெட்போனை காதிலிருந்து கழட்டி காண்பிக்கும் போதே தெரிந்துவிடுகிறது. பின் எதற்கு மொத்த சீனையும் ப்ளாக் & வொயிட்டில் ரீவைண்ட் ஷாட்ஸ்? அந்த நிமிடத்தில் ஜீவாவின் மேல் கிடைக்க வேண்டிய சிம்பதி இந்த காட்சிகளினால் விரையமாகிறது.
படம் காமெடி படமா, காதல் படமா என்ற குழப்பத்தினால், பல இடங்களில் லாஜிக் மீறின சீரியல் டிராமா காட்சிகளால், இம்மாதிரியான படங்களின் அந்த காதலர்களை பார்க்கும் போது படம் பார்பவர்களின் மனநிலை,அவர்கள் எப்படியாவது சேரவேண்டும், இரண்டு பேரில் யாராவது விட்டு கொடுங்களேன் என்று நம் மனது பதைக்கும், இந்த நடுவாந்திர திரைக்கதை அமைப்பினால் ஒரு அழகான காதல் கதையை மிஸ் செய்துவிட்டார்கள். எதிர்பார்பில்லாமல் போனால் ஜஸ்ட் ரசிக்கலாம்..